9 ஜன., 2011

கத்தர்:உள்ளங்களை கொள்ளைக்கொண்ட "ஹாப்பி லைஃப் சீரீஸ்" நிகழ்ச்சி

கத்தர்,ஜன.9:வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக கத்தர் நாட்டில் செயல்பட்டுவரும் இந்திய ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட "ஹாப்பி லைஃப் சிரீஸ்" தொடர் நிகழ்ச்சியில் பரிமாறிய உள்ளத்தைத்தொடும் கருத்துக்களும், மக்களின் பங்களிப்பும் சிறப்பிக்க வைக்கின்றன.

குழந்தைகள் சந்திக்கும் மனோரீதியான பிரச்சனைகள் முதல், குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகள் வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்திய ஃபெடர்னிடி ஃபாரம் கத்தரில் இதுத்தொடர்பான தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியினை தலைமையேற்று நடத்துபவர் ஆக்ஸஸ் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங் சென்டரின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர்.சி.ஹெச்.அஷ்ரஃப் ஆவார்.

நேற்று முன்தினம் தோஹா குவாலிட்டி ஹைஃபர் மார்க்கெட் அரங்கில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் 450 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை ஹைஃபர் மார்கெட்டின் எம்.டி ஸம்சுத்தீன் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய டாக்டர் சி.ஹெச்.அஷ்ரஃப், சந்தோஷமான குடும்பத்தில்தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமென்றும், இத்தகைய சந்தோஷமான சூழலை உருவாக்குவது சிரமமான காரியம் அல்ல எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு திருமணத்திற்கு தயாராவது தொடர்பான உளவளப்படுத்துதல்(கவுன்சிலிங்) நிகழ்ச்சியில் 300 பேர் கலந்துக்கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கத்தர்:உள்ளங்களை கொள்ளைக்கொண்ட "ஹாப்பி லைஃப் சீரீஸ்" நிகழ்ச்சி"

கருத்துரையிடுக