14 ஜன., 2011

டெல்லி மஸ்ஜித் இடிப்பு:எஸ்.டி.பி.ஐ கண்டனம்

புதுடெல்லி,ஜன.14:டெல்லியில் ஜங்க்புராவில் நிஸாமுத்தீன் ரெயில்வே நிலையம் அருகே அமைந்திருந்த அல்நூர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் கைவைக்க துணியாத அரசு இந்த மஸ்ஜிதை இடிப்பதற்கு அவசரம் காட்டியுள்ளது என எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் இ.அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

மஸ்ஜிதை இடித்தது நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் எனக்கூறுவது தந்திரமாகும். புராதனப் பொருள் பாதுகாப்பு என்ற பெயரில் மஸ்ஜிதுகளை கையகப்படுத்தி அவற்றில் வழிப்பாட்டை மறுக்கும் அரசு தற்பொழுது வழிப்பாட்டுத் தலமாக உபயோகத்திலிருக்கும் மஸ்ஜிதில் கை வைத்தது அகங்காரமாகும் எனக்கூறிய இ.அபூபக்கர், அரசு, அரசியல் கட்சிகள்,தனிநபர்கள் ஆகியோர் வசமுள்ள வக்ஃப் சொத்துக்களை மீட்க தயாராகுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் மஸ்ஜித் இடிக்கப்பட்டதுத் தொடர்பாக நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் எஸ்.டி.பி.ஐ உறுதுணையாக இருக்கும் என இ.அபூபக்கர் மேலும் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லி மஸ்ஜித் இடிப்பு:எஸ்.டி.பி.ஐ கண்டனம்"

கருத்துரையிடுக