சென்னை,ஜன.30:'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.' என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.
கிழக்கு தாம்பரம், கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலர் ஹைதர் அலி, ம.ம.க., பொதுச்செயலர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது; ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவது; வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகம் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: "விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் பலம் வாய்ந்துள்ள எங்கள் கட்சிக்கு கணிசமான அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். அதற்கான பணிகளில் தொண்டர்கள் நாளை (இன்று) முதலே ஈடுபடுவார்கள்." இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

2 கருத்துகள்: on "தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: மனித நேய மக்கள் கட்சி அறிவிப்பு"
Assalamu alaikkum varah........
Nam katchigal aarambam seivathu intraya kala kattathil kattayam entralum, ithu pontra koottanigal namathu otrumayai pirivinayakkum seyal.
Kootani amaippathu oru kattaya soolal entralaum namathu samuthaya katchigal pala irukintrana avatrai ellam ontru serthu ore varisayil nintral matravargalidam ithu pontra seatuku kayentha vendam enbathu enathu karuthu..........
Vasalam
அஸ்ஸலாமு அலைக்கும்...
முஸ்லிம் இயக்கங்களுக்கு... என் அன்பான வேண்டுகோள்.
மார்க்கம் சம்பந்தமாக தங்களுக்குள் ஒற்றுமையின்றி எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் முதலில் இங்கே இருக்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒரு 'தேர்தல் கூட்டணி' போடுங்கள். (தேர்தலுக்குப்பின் தனித்தனியே மீண்டும் பழையபடி சிதறிக்கொள்ளலாம்...டோன்ட் ஒர்ரி). இதைச்செய்யாமல் அவசரப்பட்டு கழகங்களுடன் கூட்டணி போட்டுவிடாதீர்கள்.
இப்படி தேதலுக்காக மட்டும் ஓரணியில் திரண்ட பின்னர், தமிழக முஸ்லிம்களின் நலன்களுக்காக வைக்க வேண்டிய கோரிக்கைகளை களத்தினில் நிற்கும் இரு பெரும் கழக கூட்டணிகளிடம் வையுங்கள். யார் உங்கள் கோரிக்கைகளுக்கு உண்மைலேயே மனசாட்சியுடன் ஆதரித்து எழுத்துப்பூர்வமாய் உறுதி மொழி தருகிறார்களோ அவர்களை ஆதரியுங்கள்/ஆதரிக்க சொல்லுங்கள்.
அப்படி நாம் ஆதரித்தோர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து நமக்கு நல்லது செய்தால், நாம் 234 தொகுதியிலும் வெற்றி பெற்றது போலத்தான்.
மாறாக, தொகுதி(கள்) பெற்றுவிட்டால், "உங்களுக்கு கொடுக்க வேண்டியதைத்தான் கொடுத்தாச்சே.. அப்புறம் இன்னும் என்ன கோரிக்கை?" என்பார்கள். கிடைத்த ஓரிரண்டு தொகுதியிலும் கூட கூட்டணி தமத்துக்குத்தான் கட்டுப்பட்டாக வேண்டுமே ஒழிய தாங்கள் விரும்பும்படி முஸ்லிம்களுக்கு தொகுதி நிதியை செலவழிக்க முடியாது. முரண்டு பிடித்தால், தேவைக்கு அதிகமாய் எம்எல்ஏ இருந்தால் கூட்டணியை விட்டு வெளியேற்ற எவ்வளவு காலம் ஆகும்? அப்புறம் கோரிக்கையாவது, மண்ணாவது?
முஸ்லிம்களின் மக்கள் (ஓட்டு) சக்திக்குத்தான் அரசியல்வாதிகளிடம் மதிப்பே அன்றி முஸ்லிம் எம்எல்ஏ க்களுக்கு ஒன்றும் கிடையாது. வேண்டுமானால் இவர்கள் மூலம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் முஸ்லிம்களை அடக்கலாம், போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்யலாம்.
கருத்துரையிடுக