29 ஜன., 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பா.ஜ.க மாநில அரசுகள் - மனித உரிமை கருத்தரங்கில் திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி,ஜன.29:பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஒருங்கிணைந்து டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்திய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அவர் இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்தியதாவது:

பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் தவறாகக் கைது செய்யப்படுகின்றனர். இதனைத் தடுக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரப்படுகிறது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

பல்வேறு ஹிந்துத்துவா அமைப்பினர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கின்றனர். அவர்கள் மீதான கெடுபிடி அதிகமானதால் குஜராத் மாநிலத்தில் பலர் அடைக்கலம் புகுந்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்கள் இந்து பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது. அந்த மாநிலங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பாஜக ஆதரவளித்து வருகிறது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஆர்எஸ்எஸ், அதனுடன் தொடர்புடைய அமைப்பினர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் பயங்கரவாதத்திற்கு 'சங் பயங்கரவாதம்' என பெயர்சூட்டினார் அவர்.

முன்பு ரதயாத்திரை நடத்தி வன்முறையைத் தூண்டியவர் பாஜக தலைவர் அத்வானி. தங்கள் தரப்பு எப்போதெல்லாம் பலம் குறைகிறதோ, அப்போதெல்லாம் மதவாதத்தை தூக்கிப் பிடிப்பதே பாஜகவின் கொள்கை.

இந்துக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இந்து பயங்கரவாதிகளை உருவாக்குகின்றன என்றே கூறுகிறேன் என்றார் திக்விஜய் சிங்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், ஆர்எஸ்எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பா.ஜ.க மாநில அரசுகள் - மனித உரிமை கருத்தரங்கில் திக்விஜய் சிங் குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக