புதுடெல்லி,ஜன.23:பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய இயக்கம் என மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த மஹாராஷ்ட்ரா முன்னாள் ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேயால் தடைச் செய்யவேண்டும் என பரிந்துரைச் செய்யப்பட்ட ஹிந்து ஜாக்ரதி சமிதியை குஜராத் முஸ்லிம் படுகொலை பயங்கரவாத முதல்வர் நரேந்திரமோடி புகழ்ந்து தள்ளிய கடிதத்தை டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு தானே தியேட்டர் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடைய சனாதன் சன்ஸ்தான் அமைப்புடன் ஹிந்து ஜாக்ரதி சமிதியையும் தடைச் செய்யவேண்டுமென கர்காரே தான் கொல்லப்படுவதற்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரைச் செய்திருந்தார்.
தானே குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் ஜாக்ரதி சமிதிதான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்து ஜனஜாக்ரதி சமிதியை புகழ்ந்தும், அவ்வமைப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மோடி தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
"இனிமேலும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். தேசியவாதிகளான(?) சன்னியாசிகளும், தலைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இதுவாகும். தேசத்தை பிரிக்கும் தீவிரவாதிகளை தோற்கடிக்க தேசத்துடனான உறுதியையும், ஆதரவையும் சக்திப்படுத்த வேண்டும்.
ஹிந்து ஜனஜாக்ரன் சமிதி அஹ்மதாபாத்தில் நடத்தும் ஜனஜாக்ரன் பேரணியும், தர்மசபையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் அமைப்பாளர்களுக்கு நான் அனைத்துவிதமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மோடி குறிப்பிடுகிறார்.
நவி மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்து ஜன ஜாக்ரதி சமிதியின் உறுப்பினர்களுக்கு தாம்ஸ் மாவட்டத்தில் தனது ஆசிரமமான சபரியில் தலைமறைவாக வாழ ஏற்பாடுகள் செய்ததாக குண்டுவெடிப்புகள் வழக்கில் கைதான அஸிமானந்தா தெரிவித்திருந்தான்.
அஸிமானந்தவுடனான நரேந்திர மோடியின் தொடர்புக் குறித்து ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பயங்கரவாத இயக்கத்தை புகழும் பயங்கரவாதியின் கடிதம்"
கருத்துரையிடுக