11 பிப்., 2011

எகிப்து எழுச்சியின் உயிர் தியாகிகள் - 1

கெய்ரோ,பிப்.11:பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை அரபுலகின் மிகப் பெருமைவாய்ந்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான தியாகம் செய்துள்ளனர்.

இத்தியாகிகளைக் குறித்த தகவல்களை ஆன்இஸ்லாம்.நெட் இணையதளம் வெளியிட்டு வருகிறது.

உயிர்தியாகி அம்ர் கரீப்
அய்ன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் அம்ர் கரீப். தனது நாட்டு மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என கனவு கண்டவர்.

துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி ஏற்படுத்திய உந்துதலால் எகிப்தின் வீதிகளில் தங்களின் உரிமைகளுக்காக மக்கள் களமிறங்கி போராட துணிந்ததை பார்த்தார் அம்ர் கரீப். 25 வயதேயான அம்ர் கரீப் தனது கனவு நிறைவேறப் போவதை உணர்ந்தார்.

ஜனவரி 28-ஆம் தேதி எகிப்துநாட்டு மக்களுடன் இணைந்து 1981-ஆம் ஆண்டு முதல் சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் முபாரக் பதவி விலகக்கோரி போராடத் துவங்கினார்.

மிக ஆர்வத்துடன் எகிப்திய அதிபருக்கெதிராக முழக்கமிட்டார். அவ்வேளையில் சண்டாளர்களின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த இரண்டு தோட்டாக்கள் அமர் கரீபின் வயிற்றை துளைத்தது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்களின் முயற்சி வீணானது. ஐந்து நாட்கள் கழித்து அம்ர் கரீப் இவ்வுலகை விட்டு பிரிந்தார். (இன்னாலில்லாஹி.....)

அம்ர் கரீபின் நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இவ்வாறு வாசகங்களை எழுதியுள்ளார்: "அம்ர் தனது வாழ்நாள் முழுவதும் எதற்காக காத்திருந்தாரோ அது கிடைக்கும் வரை போராடினார்"

"அவர் எங்களில் சிறந்தவர். இந்தப் போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்ய அவர் விரும்பினார். தோட்டா தன்னை நோக்கி பறந்து வந்தபோதும் அவர் ஓடவில்லை"

ஆன்இஸ்லாம்.நெட்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "எகிப்து எழுச்சியின் உயிர் தியாகிகள் - 1"

லாயம் சகோதரர்கள் சொன்னது…

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க க...ருணையுடையவன்.
- அல் குர் ஆன்59:10

கருத்துரையிடுக