16 பிப்., 2011

முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி - எஸ்.டி.பி.ஐ

சென்னை,பிப்.16:முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தொகுதி ஒதுக்கீடு, ஊழலை ஒழிக்க சரியான செயல்திட்டம் போன்ற எஸ்.டி.பி.ஐ-ன் கோரிக்கைகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "எஸ்.டி.பி.ஐ. கடந்த 1 1/2 வருடங்களாக தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனது கட்டமைப்பை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உறுப்பினர்களுடனும், பல்லாயிர கணக்கான செயல் வீரர்களுடனும் மக்கள் பணியாற்றி வருகிறது.

தற்போது எஸ்.டி.பி.ஐ.-ன் கிளை முதல் மாவட்டம் வரை உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். மார்ச் 26-ஆம் தேதி டில்லியில் தேசிய பொதுக்குழு நடைபெறும் அதில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்

எஸ்.டி.பி.ஐ.-ன் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக வரும் 20-ஆம் தேதி சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய 'சென்னை மண்டல மாநாடு' சிறப்பாகவும் எழுச்சியுடனும் இறையருளால் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் எழுச்சியுடன் பங்கேற்பார்கள். முன்னதாக கொடியேற்றம், கருத்தரங்கும், பேரணி ஆகியவை நடைபெறும். இம்மாநாடு எஸ்.டி.பி.ஐ.யின் வெற்றி மாநாடகாவும், ஒரு மைல்கல்லாக அமையும். இதில் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், எஸ்.டி.பி.ஐ.-ன் தேசிய மாநில நிர்வாகிகளும் கலந்து உரையாற்றுவர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களில் அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 10% தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அது போன்று இடஒதுக்கீட்டை 5% உயர்த்துவது வக்ஃபு வாரிய சொத்துகளை முறைபடுத்துவது அதில் அதிக நிதிகளை ஒதுக்குவது முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்குவது போன்ற வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் வழங்க வேண்டும். ஊழலை ஒழிக்க சரியான செயல்திட்டங்களையும் 'லோக் அறகிதா' போன்ற ஊழல் ஒழிப்பிற்கான அமைப்புகளை ஏற்படுத்துவதையும் வாக்குறுதியாக அளிக்க வேண்டும். தீண்டாமை கொடுமைகளை முற்றிலும் ஒடுக்கும் செயல் திட்டங்களையும் அதில் அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ. வரும் தேர்தலில் மேற்கண்ட வாக்குறுதிகளோடு சட்டமன்ற தேர்தலில் அதிக பிரதிநிதித்துவத்தை எஸ்.டி.பி.ஐ.க்கு தரும் கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிடுவோம். அல்லது 25 தொகுதிகளில் தனித்து எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எஸ்.டி.பி.ஐ. 60 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இத்தேர்தலில் விளங்கும்."

இவ்வாறு செய்தியாளர்களிடம் எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 கருத்துகள்: on "முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி - எஸ்.டி.பி.ஐ"

TAMIZHAN சொன்னது…

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..

பெயரில்லா சொன்னது…

sariyana mudivu

adiraitruth சொன்னது…

இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே ! என உறைப்போம்
அரசியலில் ஒடுக்கப்பட்டோரின் உறிமையை வென்றெடுப்போம் !
ஆதிக்க எதிர்ப்பாளனே எதிர்த்து களமிறங்குவோம் !
இன்ஷா அல்லாஹ் வெல்வோம் இம்மையிலும் மறுமையிலும்.

asif சொன்னது…

it is prohibited for a muslim to take part in the democracy.
Democracy is a kufr system. It cannot become legal even when muslims are benefited from it.

May allah guide all of us.

கருத்துரையிடுக