ஸன்ஆ,பிப்.17: 32 ஆண்டுகளாக அதிகாரத்தில் தொடரும் யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ராஜினாமாவைக் கோரி அந்நாட்டின் தலைநகரான ஸன்ஆவில் நடந்த எழுச்சிப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களும், போலீசாரும் மோதியதில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எதிர்கொள்ள குவிக்கப்பட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் கலைந்து செல்வதற்காக கண்ணீர் குண்டுகளை வீசினர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கிடையே யெமனின் தெற்கு நகரமான ஏடனில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். முஹம்மது அலி அல்வானி என்ற 21 வயது இளைஞர் இறந்தவர்களில் ஒருவராவார். இன்னொருவர் அடையாளம் தெரியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீசார் மீது கற்களை வீசினர். டயர்களுக்கும், வாகனங்களுக்கு தீவைத்துக் கொளுத்தினர்.
நகராட்சிக் கட்டிடத்தின் அருகே பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அல்ஜஸீரா கூறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டோர், மக்கள் ஏகாதிபத்திய ஆட்சியை தூக்கியெறிய விரும்புகிறார்கள், இது அலி வெளியேறும் நேரமாகும் என முழக்கமிட்டனர். ஸன்ஆவில் மாணவர்களுக்கும், அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர்.

0 கருத்துகள்: on "யெமன் எழுச்சிப் போராட்டத்தில் மோதல் - 2 பேர் பலி"
கருத்துரையிடுக