2 பிப்., 2011

ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளபாதிப்பு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு, மீண்டும் மிரட்டும் 'யாசி' புயல்

குயின்லாந்த்,பிப்.2:ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான நகரங்கள் மூழ்கின. சுரங்கத் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் செழிப்பாக உள்ள குயின்ஸ்லாந்த் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

டுவூம்பா நகரின் கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இவை எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சேதம் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அதன்படி குயின்லாந்த் மாகாணத்தில் மட்டும் வெள்ளத்தால் ரூ.30 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இழப்பை சரி கட்டுவதற்காக பட்ஜெட்டில் இடைக்கால வரிகளை விதிக்கப்போவதாக பிரதமர் ஜுலியா அறிவித்துள்ளார்

மிரட்டும் "யாசி" புயல்
இதற்கிடையே குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடபகுதியை இன்று சூறாவளி தாக்க இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடபகுதியில் உள்ள கெய்ரன்ஸ் நகரை, "யாசி" சூறாவளி மணிக்கு 155 மைல் வேகத்தில் தாக்க கூடும்.

மூன்றடி வரை கனத்த மழை பெய்யக் கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நகரின் கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 9,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

நகரின் முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 250 நோயாளிகளை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மாகாண தலைநகர் பிரிஸ்பேனுக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளபாதிப்பு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு, மீண்டும் மிரட்டும் 'யாசி' புயல்"

கருத்துரையிடுக