13 பிப்., 2011

எகிப்து எழுச்சியின் உயிர் தியாகிகள் - ​3

கெய்ரோ,பிப்.13:பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு வீதிகளில் இறங்கி போராடினர். 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை அரபுலகின் மிகப்பெருமை வாய்ந்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான தியாகம் செய்துள்ளனர். இத்தியாகிகளைக் குறித்த தகவல்களை ஆன்இஸ்லாம்.நெட் இணையதளம் வெளியிட்டு வருகிறது.

இஸ்லாம் பக்கீர்
தனது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக கனவு கண்டவர் இஸ்லாம்
பக்கீர். அவரது கனவு நிறைவேறவிருக்கும் வேளையில் தனது இன்னுயிரை இழந்தார் அவர்.

1989-ஆம் ஆண்டு பிறந்த பக்கீர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்.

ஜனவரி 25-ஆம் தேதி டோக்கி மாவட்டத்திலுள்ள தனது வீட்டிலிருந்து தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி ஆர்வத்துடன் சென்றார். ஆனால், பக்கீர் துவக்கத்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும் என எண்ணவில்லை. ஆனால், அவரது வயதை ஒத்தவர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சனைக்காக போராடத் துவங்கிய பொழுது, அதனைக் கண்ணுற்ற பக்கீர் எகிப்திய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தயங்கவில்லை.

போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது போலீசார் ரப்பர் குண்டால் சுட்டனர். ரப்பர்குண்டு பக்கீரின் காலைத் தாக்கியது. ஆனால், காயம் அவரை தனது நாட்டின் சிறந்ததொரு எதிர்காலத்திற்கான போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுக்கவில்லை.

ஜனவரி 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. தனது பெயர் எகிப்தின் வரலாற்றில் எழுதப்படும் என்பதை உணராமலேயே பக்கீர் தனது வீட்டிலிருந்து பிரம்மாண்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி சென்றார்.

மிகுந்த உற்சாகத்துடன் முழக்கமிட்டவரை நோக்கி கொலைக்கார தோட்டா பாய்ந்துவந்து அவரது முதுகில் தாக்கியது. மரணமடைந்தார் இஸ்லாம் பக்கீர்(இன்னாலில்லாஹி...).

வளமான நாட்டின் எதிர்காலத்திற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தவர்களின் பட்டியலில் பக்கீர் இஸ்லாமின் பெயரும்
இடம்பிடித்தது.

ஆன்இஸ்லாம்.நெட்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து எழுச்சியின் உயிர் தியாகிகள் - ​3"

கருத்துரையிடுக