புதுடெல்லி,பிப்.5:இடம் பெயர்ந்து வசிக்கும் காஷ்மீர் மாநில மக்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டாம் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில், "காஷ்மீர் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக அந்த மாநில மக்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கக் கூடாது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானதாகும். மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது" என்று கூறியுள்ளது.
தினமணி

0 கருத்துகள்: on "காஷ்மீர் மக்களை சந்தேகப்பட வேண்டாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்"
கருத்துரையிடுக