25 பிப்., 2011

கோத்ரா:நீதிமன்றத் தீர்ப்பிற்கு கண்டனம் - எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி,பிப்.25:கோத்ரா ரெயில் எரிப்புத் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கோத்ரா வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு நீதியை ஏளனம் செய்கிறது. இந்திய நீதிபீடத்தின் நொடிப்பு நிலையை இது தெளிவாக்குகிறது.

குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் இவ்வளவு காலம் பெரும்பாலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரால் அவர்களுக்கு மதிப்புமிக்க ஒன்பது ஆண்டுகள் நஷ்டமானது. ரெயிலை எரிக்க முஸ்லிம்கள் சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற போலீஸாரின் அறிக்கையை ஒத்து நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால், குஜராத் போலீஸ், அரசுக்கு சார்பாக செயல்படுவதாகும்.

ஏற்கனவே குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான சில வழக்குகளை குஜராத்திற்கு வெளியே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கதாகும்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிஷனும், குஜராத் மோடி அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனும் வெளியிட்ட அறிக்கைகளில் வேறுபாடுகள் உள்ளன.

ரெயில் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது 60 லிட்டர் பெட்ரோலை வெளியேயிருந்து ஊற்றமுடியாது எனவும், எரிக்கப்பட்ட ரெயில் பெட்டி உள்ளே பூட்டப்பட்டிருந்தது எனவும் பானர்ஜி கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியது.

நானாவதி கமிஷன் அறிக்கையை மட்டும் நீதிபதி கவனத்தில் கொண்டுள்ளாரா? என்று கருதவேண்டியுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன் பானர்ஜி கமிஷனின் கண்டறிந்தவைகளை நீதிபதி புறக்கணித்துள்ளார்.

தண்டிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குஜராத் அரசால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டவர்கள்." இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோத்ரா:நீதிமன்றத் தீர்ப்பிற்கு கண்டனம் - எஸ்.டி.பி.ஐ"

கருத்துரையிடுக