23 பிப்., 2011

கோத்ரா:விடுதலைச் செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவியலாது - குஜராத் அரசு

அஹ்மதாபாத்,பிப்.23:கோத்ரா சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைப்பு வழக்கில் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுதலைச்செய்த 63 பேருக்கு நஷ்ட ஈடு வழங்கவியலாது என குஜராத்தின் மோடி அரசு அறிவித்துள்ளது.

இச்சம்பவத்திற்கு பின்னணியில் சதித்திட்டம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதுக் குறித்து நீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் குஜராத் அரசின் செய்தித்தொடர்பாளர் வியாஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளையில் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட 63 நபர்களும் சபர்மதி சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டவர்களில் மவ்லவி உமரும் உட்படுவார். இவரைத்தான் முக்கிய குற்றவாளி என குஜராத் போலீஸ் கைது செய்திருந்தது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோத்ரா:விடுதலைச் செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவியலாது - குஜராத் அரசு"

கருத்துரையிடுக