24 பிப்., 2011

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கப்பல் அனுப்ப உத்தரவு: அமைச்சர் வாசன்

டெல்லி,பிப்.24:லிபியாவில் அதிபருக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் புரட்சி தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களை காப்பாற்ற கப்பல் அனுப்பியருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

துனிசீயா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து லிபியாவில் ஜனநாயக ஆட்சி கோரி மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 42 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருக்கும் முஅம்மர் கதாஃபிக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை அடக்க ராணுவமும் அதிபர் ஆதரவாளர்களும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

இதனால் கடந்த ஒரு வாரமாக லிபியா முழுவதும் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும், அதிபர் கதாஃபியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த புரட்சி மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள 18 ஆயிரம் இந்தியர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. அவர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக எம்.வி.ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பலை லிபியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டு இருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறிதாவது, இந்த கப்பல் லிபியாவில் உள்ள திரிபோலி, பென்ஹாசி துறைமுகங்களுக்கு சென்று அங்கு காத்திருக்கும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கலவரத்தால் பாதிக்கப்படாத துறைமுக நகருக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

பலியான தொழிலாளிக்கு ரூ.1 லட்சம்: கருணாநிதி:
இதற்கிடையே லிபியாவில் பலியான தமிழக தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கப்பல் அனுப்ப உத்தரவு: அமைச்சர் வாசன்"

valasai Faisal சொன்னது…

அதையாவது உருப்படிய செய்ங்கப்பா.............

peer சொன்னது…

welcome to INDIA,S humanity and in future it should improved his service not by ship but flights why because there by ship it will take more times to reach in mean time what will happened who knows

கருத்துரையிடுக