14 பிப்., 2011

எகிப்து மக்கள் எழுச்சியை ஆதரித்து ஈரானில் எம்.பிக்கள் பேரணி

டெஹ்ரான்,பிப்.14:ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த எகிப்திய மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஈரான் பாராளுமன்ற(மஜ்லிஸ்) உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.

பாராளுமன்றத்திற்கு அருகிலிருந்து துவங்கிய பேரணிக்குப் பிறகு உரை நிகழ்த்திய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானி எகிப்தின் வளர்ச்சியைக் குறித்தும், உயிர்தியாகிகளைக் குறித்தும் உணர்ச்சிப்பொங்க குறிப்பிட்டார். அல்லாஹ் அக்பர், முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டும், அமெரிக்கா ஒழியட்டும் ஆகிய முழக்கங்களை எம்.பிக்கள் முழங்கியதாக ஃபார்ஸ் செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது.

முபாரக்கின் வீழ்ச்சியை ஆதரித்து காஸ்ஸா,நியூயார்க், சான்ஃப்ரான்ஸிஸ்கோ, வாஷிங்டன்,லண்டன், பார்சிலோனா, மாட்ரிட், பெர்லின் ஆகிய நகரங்களிலும் நேற்று முன்தினம் பேரணிகள் நடைபெற்றன.

ப்ரஸ்ஸல்ஸில் எகிப்து நாட்டு தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் எகிப்து மக்கள் எழுச்சியை ஆதரித்து கொண்டாட்டங்கள் நடந்தேறின என ஆம்னஸ்டி இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து மக்கள் எழுச்சியை ஆதரித்து ஈரானில் எம்.பிக்கள் பேரணி"

கருத்துரையிடுக