9 பிப்., 2011

முபாரக்கிற்கு பிறகு உமர் சுலைமான் எகிப்து அதிபராகவேண்டும் -இஸ்ரேல் விருப்பம்

லண்டன்,பிப்.9:எகிப்து சர்வாதிகார அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு பிறகு உமர் சுலைமான அதிபராக வேண்டுமென இஸ்ரேல் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்கிலீக்ஸ் கசியவிட்ட அமெரிக்க ரகசிய ஆவணங்களை மேற்கோள்காட்டி பிரிட்டனில் டெலிக்ராஃப் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

உமர் சுலைமான் எகிப்தின் அதிபராக வரவேண்டுமென இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் டேவிட் ஹக்காம், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்த தகவல் 2008 ஆம் ஆண்டு ஆவணத்தில் காணப்படுவதாக பத்திரிகை கூறுகிறது.

முபாரக் இறந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ உமர் சுலைமான் இடைக்கால அதிபராக பதவியேற்பார். அதுதான் எங்களுடைய விருப்பமும் என ஹக்காம் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், எகிப்து நாட்டின் ரகசிய புலனாய்வு பிரிவுக்குமிடையே தனிப்பட்ட உறவை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கினை உமர் சுலைமான் வகித்திருந்தார்.

1993-ஆம் ஆண்டுமுதல் எகிப்து நாட்டின் ரகசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக பதவி வகித்துவந்தார் உமர் சுலைமான். இஸ்ரேல்-ஃபலஸ்தீன் விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதும், டெல்அவீவிற்கு அடிக்கடி உமர் சுலைமான் செல்வதும் வழக்கமாகும்.

வெகுஜன எழுச்சியைத் தொடர்ந்து எகிப்தின் துணை அதிபராக முபாரக் உமர் சுலைமானை நியமித்திருந்தார். உமர் சுலைமானுக்கு பரிபூரண ஆதரவை தருவதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அமெரிக்க தலைவர்களுடான தொலைபேசி உரையாடலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை உமர் சுலைமான் கடுமையாக விமர்சித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முபாரக்கிற்கு பிறகு உமர் சுலைமான் எகிப்து அதிபராகவேண்டும் -இஸ்ரேல் விருப்பம்"

கருத்துரையிடுக