26 பிப்., 2011

லிபியா மீது அமெரிக்கா தடை

வாஷிங்டன்,பிப்.26:லிபியாவில் ஆட்சி மாற்றங்கோரி நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச அளவில் லிபியாவின் மீது தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுவரும் வேளையில் அமெரிக்கா லிபியா மீது ஒருமுகமான தடையை விதிப்பதாக அறிவித்துள்ளது.

திரிபோலியில் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படும் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. கத்தாஃபி மற்றும் அவரது உறவினர்களின் அமெரிக்க வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். லிபியாவுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள இதர நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜெ.கார்ணி தெரிவித்துள்ளார்.

லிபியாவுடனான ராணுவ உறவும், ராணுவ உபகரணங்களின் விற்பனையும் மிகவும் குறைவு எனவும் இவற்றை தற்போது நிறுத்தி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கத்தாஃபி தனது நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் எனவும் கார்ணி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா மீது அமெரிக்கா தடை"

கருத்துரையிடுக