8 பிப்., 2011

அமெரிக்க தூதரக அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானியின் மனைவி தற்கொலை

இஸ்லாமாபாத்,பிப்.8:பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக அதிகாரியான ரேமண்ட் டேவிஸினால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களில் ஒருவர் முஹம்மது ஃபஹீம் ஆவார்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஃபஹீமிற்கு அரசிடமிருந்து நீதி கிடைக்காது எனவும், விசாரணை இல்லாமலேயே டேவிஸ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஃபஹீமின் மனைவி ஷுமைலா விஷம் குடித்து தற்கொலைச் செய்துக்கொண்டார்.

லாகூரில் கடந்த மாதம் அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் ஃபஹீம் உட்பட இரண்டு பாகிஸ்தானிகளை சுட்டுக் கொன்றிருந்தார். அவர் தூதரக பதவியிலிருப்பதால் உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அமெரிக்கா கோரியிருந்தது. டேவிஸ் தற்பொழுது போலீஸ் காவலில் உள்ளார்.

விஷம் குடித்த ஷுமைலா ஃபைஸலாபாத்தில் அலீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உயிரை காப்பாற்றுவதற்காக கடுமையாக போராடிய போதும் தோல்வியடைந்துவிட்டதாக டாக்டர் யாஸின் ஹாஷ்மி தெரிவிக்கிறார்.

இதற்கிடையே இரண்டுபேரை சுட்டுக்கொன்ற டேவிஸைக் கண்டித்து லாகூரில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டம் நடைப்பெற்றது. அமெரிக்க தூதரகம் முன்பு நடந்த இந்தப்போராட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். குற்றவாளியை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும், பாகிஸ்தான் சட்டத்தின் படி அவரை தண்டிக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை
விடுத்தனர்.

அதேவேளையில்,கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தான் ரகசிய புலனாய்வு
அதிகாரிகள் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க தூதரக அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானியின் மனைவி தற்கொலை"

கருத்துரையிடுக