15 பிப்., 2011

தஸீர் கொலை:காதிரியின் மீது குற்றம் சுமத்தப்பட்டது

இஸ்லாமாபாத்,பிப்.15:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னர் ஸல்மான் தஸீரை கொலைச் செய்ததுத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட அவரது மெய்க்காப்பாளர் மும்தாஸ் காதிரியின் மீது நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

மத அவமதிப்புச் சட்டத்தை திருத்த வேண்டுமென கோரிய கவர்னரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை காதிரி ஒப்புக்கொண்டதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்தது. ஆவணங்களை பரிசோதித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர் கொலையும், தீவிரவாதச் செயலையும் நிகழ்த்தியுள்ளார் என தெரிவித்தார் என காதிரியின் வழக்கறிஞர் மாலிக் முஹம்மது ராகிப் கானை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி தெரிவித்துள்ளது.

அடுத்த விசாரணை இம்மாதம் 26-ஆம் தேதி நடைபெறும். அப்பொழுது சாட்சிகளும், ஆதாரங்களும் ஆஜர்படுத்தப்படும் என வழக்கறிஞர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தஸீர் கொலை:காதிரியின் மீது குற்றம் சுமத்தப்பட்டது"

கருத்துரையிடுக