21 பிப்., 2011

எழுச்சியுடன் நிறைவடைந்த எஸ்.டி.பி.ஐ யின் சென்னை மண்டல மாநாடு

சென்னை,பிப்.21:அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்! எனும் மாபெரும் முழக்கத்துடன் சென்னை இராயப்பேட்டை காயிதேமில்லத் திடலில் (ஒய்.எம்.சி.ஏ. வளாகம்) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல மாநாட்டை காலை 9 மணியளவில் மாநிலத் தலைவர் தெஹ்லான் கொடியேற்றி துவக்கி வைத்தார். அப்போது தேசிய மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.யின் செயல்வீரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பினர்.

பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு எழுச்சிப் பேரணி துவங்கியது. பேரணியை எஸ்.டி.பி.ஐ.யின் அகில இந்தியத் தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து இறுதியில் 4.30 மணிக்கு மாநாட்டு திடலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

சரியாக மாலை 5 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. யின் கொள்கைப் பாடலுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.யின் பொதுச் செயலாளர் முபாரக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ், எஸ்.டி.பி.ஐ. கர்நாடக மாநில துணைத் தலைவர் பேரா.நாஸ்னி பேகம், நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்டின் துணைத் தலைவர் பாத்திமா ஆலிமா, தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் அருள்தாஸ், எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் இ.அபுபக்கர், பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், எஸ்.டி.பி.ஐ.யின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். ரஃபீக் அஹமது ஆகியோர் உரையாற்றினர். எஸ்.டி.பி.ஐ.யின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தார். எஸ்.டி.பி.ஐ.யின் மாநில பொருளார் அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. நாடு முழுவதும் 2003 முதல் தொடர்ந்து நடந்த 10க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. குண்டுவெடிப்பு வழக்குகளை துரிதப்படுத்தியும் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் உடனே கைது செய்யப்பட வேண்டும். மேலும் முன்னதாக கைது செய்யப்பட்ட அப்பாவி (மக்களை) உடனே விடுதலை செய்ய வேண்டும்.

2. சமீபத்தில் வெளியாகிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவ்ர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை போல், காமன்வெல்த் ஊழல் புகழ் கல்மாடி, ஆதர்ஸ் ஊழல் அசோக் சவான், நில மோசடி ஊழல் கர்நாடக எடியூரப்பா போன்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். நீதி செலுத்தும் விஷயத்தில் எந்தப் பாகுபாடும் காட்டாமல் குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட வேண்டும்.

3. தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீதமான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தருவதை தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று செயல்படுத்த வேண்டும்.

4. வக்ஃப் சொத்துக்கள் பல இடங்களில் சமூக விரோத சக்திகளால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரசு தலையிட்டு அத்தனை வக்ஃப் சொத்துக்களையும் மீட்டெடுத்து நல்ல விஷயங்களுக்கு பயன்பட ஆவன செய்ய வேண்டும்.

5. தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்தும், சிறைப்பிடித்தும் வரும் இலங்கை ராணுவத்தினரின் அராஜகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் உடனே தலையிட்டு தமிழக மீனவர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

6. சமீப காலமாக தொடரும் தேர்தல் கால பணப் பட்டுவாடா நிலைகளும், ஓட்டுக்குப் பணம் என்கிற மோசமான செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு சரி செய்ய வேண்டும். ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி அனைத்து சமூக மக்களின் வாக்குரிமையை நிலை நிறுத்த தேர்தல் ஆணையம் ஆவண செய்ய வேண்டும்.

7. முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் மத துவேஷத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரத யாத்திரை நடத்தி வரும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே, மத்திய, மாநில அரசு நிதி உதவியில் அதிகமா கல்வி கற்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின - பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள். ஹிந்து சமூக மாணவர்களே அதிகம் சலுகைகளைப் பெற்று வருகின்றார்கள். இச்சூழலில் மாணவர்கள் மத்தியில் மத துவேஷத்தை ஏற்படுத்திட பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரை மற்றும் பொது நிகழ்ச்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

8. வரும் காலங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்ப குறைந்த பட்சம் 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள் விடுக்கிறது.

9. சமூகத்தைப் பிளவுபடுத்தி வரும் சமூக விவாத கும்பல்களோடு சமீபத்தில் கடையநல்லூர், ஏர்வாடி பகுதி காவல்துறையினரும் கைகோர்த்து நடத்தி வரும் அராஜகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்.டி.பி.ஐ. நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மீதும், பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்த சமூக விரோத கும்பல் மீதும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்துகிறது.

10. நலிந்து வரும் உருது மொழியை பாதுகாத்திடாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தின் மூலம் உருது மொழியை தமிழக அரசு மேலும் நலிவடையச் செய்திருக்கிறது. இந்நிலையை மாற்றி உருது மொழியை பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கேட்டுக் கொள்கிறது.

11. நலிவடைந்த நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களின் வாழ்க்கை நிலையை கேள்விக்குறியாக்கும் கடல் அட்டை மீன் மீதான தடையை மத்திய அரசு விலக்கக் கோரியும் மீனவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளை மறுபரிசீலனை செய்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவிட மத்திய அரசை எஸ்.டி.பி.ஐ. கேட்டுக் கொள்கிறது.
போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 கருத்துகள்: on "எழுச்சியுடன் நிறைவடைந்த எஸ்.டி.பி.ஐ யின் சென்னை மண்டல மாநாடு"

கனியன்பன் சொன்னது…

இன்ஷா அல்லாஹ் இந்த எழுச்சி ஆட்சியைப் பிடிக்கும் வரை தொடரும்!

மாஷ் சொன்னது…

எகிப்தின் மக்கள் எழுச்சியின் பிரதிபலிப்பா இது...

ABDUL AZIZ, PETTAVAITHALAI சொன்னது…

allahu akbar. SDPI-IN YELUCHI INDIA NATTIN VALARCHI....

Unknown சொன்னது…

oolal karai padintha katchigalukku mathiyil oor eluchiyaga athigarathai pothuvaaka purapattulla SDPI kaalai peytha malayil thondri malai poluthil marainthu poogum eesal alla. varalattrai puratti podapogum puthu erimalaiyaagum ,insha allah intha indraya thuvakkilirunthu purapattulla thootta ilakai adayum ,
maatram nitchayam
antha maatram SDPI vaal mattumae saathiyam
Iniyan
Baharainil irunthu

கருத்துரையிடுக