13 பிப்., 2011

யெமனில் அரசுக்கெதிரான எழுச்சிப் போராட்டம் வலுவடைகிறது

ஸன்ஆ,பிப்.13:யெமன் நாட்டிலும் அரசுக்கெதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

தலைநகரான ஸன்ஆவில் நேற்று ஆயிரக்கணக்கானோர் அரசுக்கெதிரான எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பேரணியின்போது அரசு ஆதரவாளர்களும், எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்குமிடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர்.

அரசு ராஜினாமாச் செய்யவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர். 'எகிப்து புரட்சிக்கு பிறகு யெமன் புரட்சி' என அவர்கள் முழக்கமிட்டனர்.

அரசுக்கெதிராக ஸன்ஆ பல்கலைக்கழகத்தில் 300 மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மக்கள் எழுச்சிப் பேரணி எகிப்து நாட்டு தூதரகத்தை நோக்கி செல்லும் வழியில் அரசு ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டது.

எகிப்து புரட்சி ஏற்படுத்திய உத்வேகத்தில் யெமனின் பல இடங்களிலும் அரசுக்கெதிரான எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. 2013-ஆம் ஆண்டு பதவி காலம் முடிவதைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து விலகப்போவதாக சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் யெமன் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யெமனில் அரசுக்கெதிரான எழுச்சிப் போராட்டம் வலுவடைகிறது"

கருத்துரையிடுக