6 பிப்., 2011

சர்ச்சுகள் மீதான தாக்குதல்: கர்நாடக கமிஷன் அறிக்கையை தள்ளுபடிச் செய்ய கிறிஸ்தவ சபைகள் கோரிக்கை

பெங்களூர்,பிப்.6:கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறித்து விசாரிக்க அம்மாநில பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சோமசேகரா கமிஷன், தாக்குதலில் தொடர்புடைய சங்க்பரிவார்களுக்கு 'பரிசுத்தமானவர்கள்' என சான்றிதழ் வழங்கி அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இவ்வறிக்கையை தள்ளுபடிச் செய்யவேண்டுமென கிறிஸ்தவ சபைகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் சர்ச்சுகள் மீதான தாக்குதலைக் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென அவை கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று பெங்களூர் கிறிஸ்தவ சபையின் தலைமையகத்தில் கர்நாடகா ரீஜியன் கத்தோலிக் பிஷப் கவுன்சில், அனைத்து கிறிஸ்தவ சபைகள் அடங்கிய அமைப்பான கர்நாடகா யுனைட்டட் கிறிஸ்தியன் ஃபாரம் ஃபார் ஹியூமன்ரைட்ஸ் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

முற்றிலும் பாரபட்சமான அறிக்கையை சோமசேகரா கமிஷன் சமர்ப்பித்துள்ளது. சில இடங்களில் நடந்த தாக்குதல்கள் வேண்டுமென்றே வகுப்புவாத மோதல் சூழலை உருவாக்க சிலர் திட்டமிட்டு நடத்தியது என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் அத்தாக்குதல்களின் பின்னணியில் செயல்பட்டது யார்? என்பதுக் குறித்து கமிஷன் விவரிக்கவில்லை.

வெளிநாட்டுப் பணத்தை பயன்படுத்தி மதமாற்றத்தை நடத்துவதால் கிறிஸ்தவ சபைகள் நாள்கள் செல்லசெல்ல வலுப்பெற்று வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் தொகை புள்ளி விபரங்களின்படி கர்நாடகாவில் 2.1 சதவீத கிறிஸ்தவர்களே உள்ளனர்.

ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் தோறும் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டுதான் வருகிறது. இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக ஒரு சம்பவத்தைப் போலும் சுட்டிக்காட்ட சோமசேகரா கமிஷனால் இயலவில்லை என கிறிஸ்தவ சபையினர் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்ச்சுகள் மீதான தாக்குதல்: கர்நாடக கமிஷன் அறிக்கையை தள்ளுபடிச் செய்ய கிறிஸ்தவ சபைகள் கோரிக்கை"

கருத்துரையிடுக