24 பிப்., 2011

கஷ்மீர் மத்தியஸ்தர் குழு இரண்டு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்

ஜம்மு,பிப்.24:கஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை பரிந்துரைக்கும் முதலாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு மத்திய அரசுக்கு இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்கும்.

பேச்சுவார்த்தைக்கு கஷ்மீர் அமைப்புகள் தயாராகத சூழலில் அவர்களின் நிலைப்பாடுகள் அறிக்கையில் உட்படுத்தவில்லை என மத்தியஸ்தர் குழு தலைவர் திலீப் பட்கோங்கர் தெரிவித்துள்ளார்.

கஷ்மீர் பிரச்சனைக்கு அனைத்து பிரிவு மக்களிடமும் இறங்கிச் செல்ல வேண்டும். கஷ்மீருக்கு சுயாட்சி தேவை எனக்கோரும் நேசனல் கான்ஃப்ரன்ஸ், பி.டி.பி ஆகிய கட்சிகளின் கோரிக்கையும், அவாமி நேசனல் கான்ஃப்ரன்ஸ், பிரதமரால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஸஹீர் அஹ்மதின் தலைமையில் நியமிக்கப்பட்ட செயற்குழு ஆகியன சமர்ப்பித்த ஆவணங்களையும் மத்தியஸ்தர் குழு ஆய்வுக்கு உட்படுத்தியதாக பட்கோங்கர் தெரிவித்தார்.

ஹுர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர்களான செய்யத் அலிஷா கிலானியும், மீர்வாய்ஸ் உமர்ஃபாரூக்கும் எழுப்பிய நான்கு மற்றும் ஐந்தாவது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என மத்தியஸ்தர் குழு உறுப்பினரான ராதாகுமார் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "கஷ்மீர் மத்தியஸ்தர் குழு இரண்டு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்"

valasai Faisal சொன்னது…

எத்தனை கமிஷன் தாண்டா போடுவீங்க. ஒரே அறிக்கை தயார் செய்கிறோம் விரைவில் தாககல் செய்வோம் என்று சொல்லிக் கொண்டு அரசாங்க பணத்தில் enjoy பண்றதே வேலையா போச்சுடா உங்களுக்கு. படிக்காத பாமரனுக்கூட தெரியும் காஷ்மீர் உள்ள ராணுவம் (பெண்களிடமும், குழந்தைகளிடமும், அப்பாவிகளிடமும் வீரத்தை காட்டும்) அங்கே இருந்து வெளியேரிட்டா பிரச்சனை ஓரளவுக்கு தீரும் என்று. ஆனால் அதை செய்யாம கமிஷன போடுரன் கருமத்த போடுரன்னு ஏண்டா உயிர வாங்குரீங்க. நீங்கள்லாம் எகிப்து, துனீஷியா, லிபியா வை எல்லாம் பார்த்தும் திருந்த மாட்டீங்களாட. உங்களையெல்லாம் எவண்டா அரசியல்வாதி ஆக்குனது அவன் மட்டும் என் கயில கெடச்சான்.... மவனே.......காஷ்மீரில் இருக்கும் ராணுவத்தை மட்டும் திரும்ப பெற்றுவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் அனைவரும் வருவார்கள் ஓரிரு மாதங்களில் சுமூக தீர்வு கிடைத்துவிடும் இன்ஷாஅல்லஹ். இதை முன்வைக்குமா இந்த மத்தியஸ்தர் குழு பொறுத்திருந்து பார்ப்போம்....

கருத்துரையிடுக