17 பிப்., 2011

மத்திய பிரதேசத்தில் பாம்ப்லேட் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.

போபால்,பிப்17: தனக்கு எதிராக சூழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருப்பதாக கூறி, மத்திய பிரதேசத்தில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். உண்மைகளை மறுத்து பாம்ப்லேட்(துண்டுப் பிரசுரம்) மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குண்டு வெடிப்பு வழக்குகளில் நம் நாட்டில் சில ஹிந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்க் பரிவார குடும்பத்திற்கும் இதில் பங்குள்ளது எனவும் கூறப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.

கைதுச் செய்யப்பட்டுள்ள அனைத்து ஹிந்துக்களும் ஆளுமை உணர்வு கொண்டவர்கள். ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து வெளியே சென்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

"காவி பயங்கரவாதம்" என்ற முழக்கம், ஹிந்துக்களை அவமானப்படுத்தும் அரசியல் சதியாக பயன்படுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இச்செயல் மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி ஆட்சியை தக்கவைக்க கூடிய திட்டம் என்றும், இது முழு பூசனிக்காயை முட்டைக்குள் மறைக்க முயலும் செயல் என்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "மத்திய பிரதேசத்தில் பாம்ப்லேட் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்."

பெயரில்லா சொன்னது…

This campaign has started not only from MP but also throughout the country including our tamilnadu through various RSS affiliates. RSS Executive committee decided to hold public campaign as the outcome of Popular Front of india Two Month campaign agonist Sangh Terrorism. ALl Muslim organisation should give hand with Popular front of india to make coomon platform aganist Sangh Facist.
Pathamadai Naamee.

பெயரில்லா சொன்னது…

Two Month campaign conducted from December 6 (Babri masjith Demolition) to January 30(Gandhi Assassination date. Millions of pamphlets, notice, public meeting seminars, rallies has severely damaged Sangh image and exposed their true cruel face.
Pathamadai Naamee

கருத்துரையிடுக