11 பிப்., 2011

பதவி விலகமாட்டேன் - முபாரக் மீண்டும் பிடிவாதம்

கெய்ரோ,பிப்.11:பதவி விலகப்போகிறார் என்ற ஊகங்களையெல்லாம் காற்றில் பறத்தி விட்டு ஹுஸ்னி முபாரக் இன்று அதிகாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் நிர்பந்தங்களுக்கு அடிபணியமாட்டேன் என அறிவித்துள்ளார்.

இதுக்குறித்து முபாரக் கூறியதாவது: "செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும்வரை நான் பதவியில் தொடர்வேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை நான் பாராட்டுகிறேன். சர்வதேச அழுத்தங்களுக்கு நான்
அடிபணியமாட்டேன். அதிகாரப் பகிர்வு சுமூகமாக நடைபெறுவதற்கு ஒரு கமிட்டி உருவாக்கப்படும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆட்சி சீர்திருத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன." இவ்வாறு முபாரக் தெரிவித்துள்ளார்.

தனது 30 ஆண்டுகால ஆட்சிக்கெதிரான போராட்டம் துவங்கியதிலிருந்து 17-வது நாள் உலக சமூகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உரையை அரசு தொலைக்காட்சி மூலம் நிகழ்த்தினார் ஹுஸ்னி முபாரக். காரணம், நேற்று முபாரக் பதவியை ராஜினாமாச் செய்யப் போவதாகவும், நாட்டைவிட்டு வெளியேறப் போவதாகவும் ஊகங்கள் நிலவின.

முபாரக் ராஜினாமாச் செய்வார் என ஆளுங்கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் கட்சியின் மூத்த தலைவரான ஹஸன் பத்ராவி நேற்று யு.ஏ.இ நேரம் இரவு 9.30 மணிக்கு தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தராக செயல்பட்ட ஒப்பந்தத்தின் படி உமர் சுலைமானிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார் எனக் கூறப்பட்டது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பதவி விலகமாட்டேன் - முபாரக் மீண்டும் பிடிவாதம்"

கருத்துரையிடுக