பாக்தாத்,பிப்.27:ஈராக்கில் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்று பைஜி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
நேற்று காலை நடந்த குண்டுவெடிப்பிலும், துப்பாக்கிச்சூட்டிலும் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
வடக்கு பாக்தாதில் ஸலாஹுத்தீன் மாகாணத்தில் எண்ணை சுத்திகரிப்புச் சாலையின் ஒரு யூனிட்டில் மர்ம நபர்கள் குண்டுவைத்துள்ளனர். பெரும் சேதம் விளைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னர் போராளிகளின் வலுவான பகுதியாகயிருந்தது பைஜி. பாக்தாத், பஸ்ரா ஆகியவற்றுடன் ஈராக்கின் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை பைஜியில் உள்ளது.
ஒன்றரை லட்சம் பேரல் எண்ணை தினமும் இங்கு சுத்திகரிக்கப்படுகிறது. ஆலை முழுவதும் மூடப்பட்டுள்ளதாக மாகாண கவர்னர் அஹ்மத் அல் ஜுபவ்ரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குண்டுவெடிப்பு:ஈராக்கில் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது"
கருத்துரையிடுக