10 பிப்., 2011

மீலாது நபி விழா ஏற்பாடுகளு​க்கு காவல் துறை தடை?

ஹைதராபாத்,பிப்.10:ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய இரு பெரும் நகரங்களில் போலீஸ் கடும் அடக்குமுறைகளை தொடர்கின்றது. மீலாது நபி விழா ஏற்பாடுகளின் போது கொடி கட்டுபவர்கள் மீது போலீஸ் அடக்குமுறைகளை கையாள்கின்றது.

கொடி கட்டுவது சென்ற வருடம் மதக் கலவரம் உருவாக காரணமாக அமைந்தது எனக் கூறி மீலாது விழா ஏற்பாடுகளுக்கு ரபியுல் அவ்வல் பிறை 1 லிருந்து முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதிகள் மற்றும் பழைய ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் போலீசார் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

எங்கெல்லாம் மீலாது விழாவிற்கான கொடி கட்டப்பட்டு இருந்ததோ அந்த பகுதிகளில் எல்லாம் முனிசிபாலிடியின் உதவியுடன் போலீசார் கொடிகளை அகற்றி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஹைதராபாத் மற்றும் செகந்திராபத் ஆகிய பகுதிகளில் மீலாத் விழா வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஆனால் மதக் கலவரங்கள் உண்டாகலாம் என்ற காரணத்தினால் மீலாது விழா ஏற்பாடுகளுக்கு கடும் கெடுபிடிகளையும் தடைகளையும் போலீஸ் ஏற்படுத்தியுள்ளது.

உயர் அதிகாரிகள் வாய் வழி உத்தரவுகளை கொடுத்துள்ளதால் காவல்துறையினர் முஸ்லிம் இளைஞர்கள் கொடி கட்டுவதை தடுத்து வருகின்றனர். எனக் கூறப்படுகிறது.

போலீசாரின் இந்த நடவடிக்கை இரு பெருநகரங்களிலும் இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்ப்படுத்தயுள்ளது.

போலீசார் கொடி கட்டுவதை மட்டும் தடுக்கவில்லை. சில இடங்களில் மீலாது விழாவிற்க்காக ஓட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் போலீசாரால் கிழிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளும் வந்துள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மீலாது நபி விழா ஏற்பாடுகளு​க்கு காவல் துறை தடை?"

கருத்துரையிடுக