19 பிப்., 2011

மக்கள் எழுச்சி:ஈராக்கில் அரசுக்கெதிரான போராட்டம் தீவிரம்

பாக்தாத்,பிப்.19:வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றைக் கண்டித்து ஈராக்கில் துவங்கியுள்ள போராட்டம் வலுவடைந்து வருகிறது.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான பஸராவில் நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் போராட்டம் நடத்தினர். வேலை வாய்ப்புகளும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

மாகாண கவர்னர் ராஜினாமச் செய்யக்கோரி ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட கய்ஸ் ஜப்பார் கூறியதாவது: 'குடிநீர் இல்லை, கரண்ட் இல்லை, எங்களுக்கு உரிமையானது குப்பைக் கூழங்கள் நிறைந்த தெருக்கள் மட்டுமே. இதற்கு மாற்றம் தேவை. அதற்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டேயிருப்போம்' என தெரிவித்தார்.

வடக்கு ஈராக்கில் குர்து சுயாட்சி பிரதேசத்திலும் போராட்டம் நடைபெற்றது. இங்கு எதிர்கட்சி அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. நேற்று முன்தினம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் மரணமடைந்திருந்தனர். தெற்கு நகரமான நஸ்ரியாவிலும் இதர சில பிரதேசங்களிலும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மக்கள் எழுச்சி:ஈராக்கில் அரசுக்கெதிரான போராட்டம் தீவிரம்"

கருத்துரையிடுக