23 பிப்., 2011

முஸ்லிம் முதலீட்டாள​ர்களை பங்கு சந்தை​யின் புதிய குறியீட்டில் சேர்க்க இந்தியா முடிவு

மும்பை,பிப்.23:இந்திய பங்குசந்தையில் பாரம்பரியமாக ஹிந்து முதலீட்டாளர்களே பெரும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர் ஆனால் இஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய குறியீடு கொண்ட நிதி உள்ளடக்கத்தை நோக்கி பங்குசந்தை நடவடிக்கையை எடுத்து வருகிறது.

நாட்டில் எண்ணிக்கையில் அதிகமிருக்கும் முஸ்லிம்களுக்கு பங்கு வர்த்தகத்தை திறந்துவிடும் முயற்சியாக டாசிஸ் ஷரியா 50 எனும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது ஆசியாவின் பழமைவாய்ந்த பங்குசந்தையான மும்பை பங்குசந்தை.

"இந்திய பங்கு வர்த்தக உரிமையில், வரலாற்றில் குறைந்த அளவே ஈடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை இப்புதிய குறியீடு அடையவேண்டும் என்பதே இதன் நோக்கம்" என்று மும்பை பங்குசந்தையின் சந்தை மேம்பாட்டுத்துறை தலைவர் ஜேம்ஸ் ஷாபிரோ கூறியுள்ளார்.

மேலும், "உங்கள் தொழிலை வளர்க்க, பங்கு வர்த்தகத்தை அதிகம் உள்ளடக்க வேண்டும். பெரும் பணக்கார வர்த்தகத்தின் மத்தியில் மெல்லிதட்டாக இருந்துகொண்டு ஒருவரால் முன்னேறிக் கொண்டே இருக்கமுடியாது" என்றும் கூறினார்.

உலகின் அதிக முஸ்லிம்கள் வாழும் இடத்தில் மூன்றாவதாக, 170 மில்லியன் முஸ்லிம்களைக் கொண்ட போதிலும், இந்தியா இஸ்லாமிய நிதிமுறையை மேம்படுத்த தவறிவிட்டதாகவும், அரசியல் திட்பம் ஹிந்துக்கள் பெரும்பான்மையான இந்தியாவில் குறைவாகவே உள்ளதாகவும் வல்லுநர்கள் குறை கூறுகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம் முதலீட்டாள​ர்களை பங்கு சந்தை​யின் புதிய குறியீட்டில் சேர்க்க இந்தியா முடிவு"

கருத்துரையிடுக