கார்த்தூம்,மார்ச்.3:சூடானின் சர்ச்சைக்குரிய எண்ணெய்வளப் பிராந்தியமான அபிஜியில் இடம்பெற்ற இன வன்முறை தொடர்பான மோதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட,தென் சூடானிய எல்லைப் பகுதியிலுள்ள அபிஜியில் கடந்த மாதம் அங்குள்ள அரப் நொமட்ஸ் மற்றும் தென்டிங்காகொக் ஆகிய இன மக்களுக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த இரு சமூகத்தவர்களினதும் பாரம்பரிய பொருளாதாரமாக மந்தை வளர்ப்பே உள்ளநிலையில் புல்நிலம் தொடர்பாக அடிக்கடி முரண்பட்டு வருகின்றனர். டிங்கா கொக் இனத்தவர் தென் சூடானையும் நொமடிக் அரப் மிஸ்ஸெரியா வட சூடானையும் சேர்ந்தவர்களாவார்கள்.
மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்கள் தொகை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

0 கருத்துகள்: on "சூடான்:இன மோதல்களில் 10 பேர் பலி"
கருத்துரையிடுக