பீஜிங்,மார்ச்.11:சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 134 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் பெருத்த சேதம் அடைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் மக்கள் தற்காலிக குடில்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் மக்கள் தற்காலிக குடில்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: on "சீனாவில் நிலநடுக்கம் 25 பேர் பலி"
கருத்துரையிடுக