9 மார்., 2011

குவாண்டனாமோவில் மீண்டும் ராணுவ விசாரணைக்கு அனுமதி

வாஷிங்டன்,மார்ச்.9:கியூபாவில் குவாண்டாமோ சிறைக் கைதிகளின் ராணுவ விசாரணை மீண்டும் துவக்குவதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அனுமதி அளித்துள்ளார். இதனால் ஒபாமாவின் குவாண்டனாமோ சிறைக் கொட்டகையை இழுத்து மூடுவேன் என்ற முக்கிய தேர்தல் வாக்குறுதி நிறைவேற இன்னும் காலதாமதமாகும் என தெரிகிறது.

ஆனால், விசாரணை மீண்டும் துவங்கும் என ஒபாமா அறிவித்தாலும் கூட, தீவிரவாதிகள் என சந்தேகிப்போரை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் விசாரணைச் செய்வதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு அமெரிக்க காங்கிரஸ் கடும்
எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

அல்காயிதாவிற்கெதிரான போராட்டத்தில் சிவிலியன் நீதிமன்றங்களுக்கு பங்குண்டு என ஒபாமா உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் அறிவிப்பைத் தொடர்ந்து குவாண்டனாமோவில் சிறைக்கைதிகள் மீது புதிய வழக்குகள் பதிவுச் செய்வதற்கான தடையை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் கேட்ஸ் நீக்குவார்.

2000-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ கப்பல் மீது யெமனில் ஏதன் துறைமுகத்தில் வைத்து தாக்குதல் நடத்தி 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் மரணிக்க காரணமானவராக குற்றஞ்சாட்டப்படும் அப்துல் கரீம் ஹரீரிக்கு எதிரான விசாரணை முதலாவதாக நடைபெறும் என கருதப்படுகிறது.

2006-ஆம் ஆண்டுமுதல் இவர் குவாண்டனாமோ சிறையில் உள்ளார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குவாண்டனாமோவில் மீண்டும் ராணுவ விசாரணைக்கு அனுமதி"

கருத்துரையிடுக