10 மார்., 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளை என்.ஐ.ஏ விசாரிக்கும்

புதுடெல்லி,மார்ச்.10:மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளுக்கான விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொள்ளும்.

இதுத் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தின் ஆராய்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், சுனில் ஜோஷி கொலை வழக்கையும் என்.ஐ.ஏக்கு அளிக்க மத்திய பிரதேச மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துக்களை ஆராய்ந்த பிறகு இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலைச் செய்த வழக்கில் ஹிந்துத்துவ பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்து மத்தியபிரதேச மாநிலத்திற்கு கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு அளிப்பதுக் குறித்த முயற்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.

ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணையை சீர்குலைக்க மத்தியபிரதேச பா.ஜ.க அரசு பிரக்யாசிங் தாக்கூரை கஸ்டடியில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது.

2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனே ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். ஆனால், திசைத் தெரியாமல் முடங்கிப்போன விசாரணை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரின் உள்ளிட்டவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து மத்திய பிரதேச போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியது.

ஜோஷி கொலைவழக்கு உள்ளிட்ட வழக்குகளை என்.ஐ.ஏவுக்கு அளிப்பதுக் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தது.

2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-இல் நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு ஆகியவற்றைக் குறித்த விசாரணையை ஏற்கனவே என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. என்.ஐ.ஏவின் சட்டப்படி பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை மாநில அரசின் அனுமதியில்லாமலேயே விசாரணை மேற்கொள்ள அனுமதியுள்ளது.

இதற்கிடையே, மலேகான் வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் இந்திரேஷ் குமாருக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிக்கும் கடிதம் இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ராணுவ உளவுத்துறையினருக்கு அளித்த விஷயம் வெளியாகியுள்ளது. 2008 அக்டோபர் 15-ஆம் தேதி தயாரான கடிதத்தில் இவ்விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ-யிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்திரேஷ்குமார் இதனை நிகழ்த்தியதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் இந்திரேஷ் குமாரின் தொடர்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளை என்.ஐ.ஏ விசாரிக்கும்"

கருத்துரையிடுக