டெல்லி,மார்ச்.7:கடந்த 37 வருடமாக கோமாவில் இருக்கும் 60 வயது நர்சை கருணைக் கொலை செய்ய அனுமதி மறுத்து விட்டது உச்சநீதிமன்றம்.
மும்பையைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷன்பாக். இவருக்கு தற்போது 60 வயதாகிறது. மும்பையில் உள்ள எட்வர்ட் கிங் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தவர் அருணா.
கடந்த 1973ம் ஆண்டு இவர் சக தொழிலாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவரது தலையில் அடிபட்டு மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டது. அன்று முதல் கடந்த 37 வருடங்களாக கோமாவில் இருக்கிறார் அருணா. மூளைச்சாவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவருக்கு எந்த உணர்வும் இல்லை.
இதையடுத்து அவரை கருணைக் கொலை மூலம் மரணமடைய வைக்க தீர்மானித்து எழுத்தாளர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தீர்ப்பை அளித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் கூறுகையில், கருணைக் கொலை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சட்ட விரோதமானதாகும். எனவே இதை அனுமதிக்க முடியாது.
அருணா வழக்கைப் பொறுத்தவரை,அவரது மருத்துவ ஆவணங்களைப் பரிசீலித்து பார்த்தபோது, அவர் கருணைக் கொலைக்கு உட்படுத்தக் கூடியவர் அல்ல என்ற முடிவுக்கு கோர்ட் வருகிறது என்று தெரிவித்தனர்.
thatstamil

0 கருத்துகள்: on "கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு"
கருத்துரையிடுக