11 மார்., 2011

முஷாரஃபை கைது செய்ய பிரிட்டனின் உதவியை நாடும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்,மார்ச்.11:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்குத் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃபை கைது செய்ய பாகிஸ்தான் பிரிட்டன் உதவியை நாடியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி முஷாரஃபிற்கெதிராக கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. மார்ச் 19-ஆம் தேதிக்கு முன்னர் முஷாரஃபை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

67 வயதான முஷாரஃப் கடந்த 2008 ஆம் ஆண்டு பாக்.அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகு லண்டனில் வசித்து வருகிறார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஷாரஃபை கைது செய்ய பிரிட்டனின் உதவியை நாடும் பாகிஸ்தான்"

கருத்துரையிடுக