புதுடெல்லி,மார்ச்.3:மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதை அடுத்து அந்த நாட்டு குழு இந்தியாவுக்கு வந்து விசாரிக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. மேலும் தாக்குதலின்போது உயிரிழந்த 9 தீவிரவாதிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரியிருந்தது. இதையடுத்து பாகிஸ்தான் விசாரணைக் குழு இந்தியா வர அனுமதி அளிப்பது என கொள்கை அளவில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட பலர் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களிடம் இந்திய குழு விசாரணை நடத்த பாகிஸ்தான் அனுமதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தானிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்' என்றார் ப.சிதம்பரம்.

0 கருத்துகள்: on "மும்பை தாக்குதல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் விசாரணை குழுவுக்கு இந்தியா வர அனுமதி"
கருத்துரையிடுக