13 மார்., 2011

எகிப்து:கிறிஸ்தவர்களை தாக்கியது முபாரக்கின் ரகசிய போலீஸ்

கெய்ரோ,மார்ச்.13:மக்கள் எழுச்சிக்கு முன்பு எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியது அந்நாட்டின் முன்னாள் ஏகாதிபத்தியவாதி ஹுஸ்னி முபாரக்கின் ரகசிய போலீஸ் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

2010 ஆம் ஆண்டு துவக்கத்தில் தெற்கு நகரமான நாக்ஹம்மாதியில் சர்ச்சில் வழிபாடு நடத்திய காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். புதுவருட கொண்டாட்டத்தின் போது இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி சர்ச் ஒன்றில் குண்டுவெடித்து 24 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இத்தாக்குதலுக்கு பின்னணியில் காஸ்ஸாவில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என ஹுஸ்னி முபாரக்கின் அரசு கூறியது. தன்னை வெளியேற்றினால் இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என தெரிவிக்க முபாரக்கின் ஏஜண்டுகள்தாம் சர்ச்சில் குண்டை வைத்தார்கள் என அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

பிரிட்டீஷ் உளவுத் துறையிலிருந்து கசிந்த சில ஆவணங்கள் கூறுவது என்னவெனில், அன்று உள்துறை அமைச்சராக பதவி வகித்த ஹபீப் அல் அத்லி குண்டுவைக்க உத்தரவிட்டார் என்பதாகும்.

அல் அத்லி இத்தகைய தாக்குதல்களை நடத்த சிறப்பு பயிற்சி பெற்ற படையை கடந்த 2004 ஆம் ஆண்டே உருவாக்கியுள்ளார். ஜுந்துல்லாஹ் என்ற பெயரில் முபாரக்கின் அரசால் உருவாக்கப்பட்ட ஒரு குழுதான் அலெக்ஸாண்ட்ரியா சர்ச்சில் குண்டு வைத்துள்ளது. குண்டு வைக்க நியமிக்கப்பட்டிருந்த ஏஜண்ட் இடத்தை காலிச் செய்வதற்கு முன்னர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு அதனை தற்கொலைப் படைத் தாக்குதலாக சித்தரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் ஜுந்துல்லாஹ் தலைவரான முஹம்மது அப்துல் ஹாதியை கைது செய்துள்ளது. எகிப்தில் புரட்சி நடக்கும்பொழுது சிறையிலிருந்து தப்பிய ஹாதி பிரிட்டீஷ் தூதரகத்தில் அபயம் தேடினார். கைது செய்யப்பட்ட ஹாதி தாக்குதல்களைக் குறித்த முக்கிய விபரங்களை தெரிவித்துள்ளார். சர்ச்சில் தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பு காவலுக்கு நின்றிருந்த போலீசார் இடத்தை காலிச் செய்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:கிறிஸ்தவர்களை தாக்கியது முபாரக்கின் ரகசிய போலீஸ்"

கருத்துரையிடுக