24 அக்., 2009

விமான நிலையத்தில் மறந்து விட்டு சென்ற 10 கிலோ தங்கம் பயணியிடம் ஒப்படைப்பு

துபாய் : கடந்த செவ்வாய் அன்று துபாய் விமான நிலையத்தில் ஈராக்கிய வணிகர் மறந்து விட்டு சென்ற 10 கிலோ தங்கத்தை துபாய் விமான பாதுகாப்பு துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர் ஒமர் அல் அத்தரிடமிருந்து பெற்று கொண்டார்.

ஈராக்கிய வணிகர் துபாய் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த தங்கத்தில் 10 கிலோ தங்கத்தை விட்டு விட்டு சென்றார். விமான நிலைய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தங்கமும் அதனோடு அவ்வணிகரின் பாஸ்போர்ட் நகலும் இருந்ததை கண்டு பிடித்தனர்.

அப்பாஸ்போர்ட் நகலில் இருந்த விபரங்களின் உதவியுடன் துரித கதியில் சம்பந்தப்பட்ட விமான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் முன்னரே விமானத்தில் உட்கார்ந்திருந்த பயணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் அதை பெற்றுக் கொண்டார். ஒமர் அல் அத்தார் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை வெகுவாக பாராட்டினார்.
source:gulfnews

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விமான நிலையத்தில் மறந்து விட்டு சென்ற 10 கிலோ தங்கம் பயணியிடம் ஒப்படைப்பு"

கருத்துரையிடுக