23 அக்., 2009

லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை - கேரள டி.ஜி.பி!

"லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை" என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இரு பெண்கள் தொடர்புடைய வழக்கில், அவர்களின் கணவர்கள் முன் ஜாமீன் கேட்டு பதிவு செய்த மனுவினைத் தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், "கேரளத்தில் லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு செயல்படுகிறதா? அதற்கு வெளிநாட்டு தொடர்புகள் உண்டா? தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உண்டா? கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் முதலான சமூக விரோத செயல்களில் அதற்கு பங்குண்டா?" என்பது உட்பட விரிவாக விசாரணை நடத்தில் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள டிஜிபி, தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு கேரளத்தில் செயல்படுவதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை"எனவும் "அவ்வாறான ஒரு இயக்கம் கேரளத்தில் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இஸ்லாமிய மதத்திற்கு மற்ற மதத்திலிருந்து பெண்களை மதம் மாற்றும் செயல் நடைபெறுகிறதா? என்பதைக் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை - கேரள டி.ஜி.பி!"

கருத்துரையிடுக