அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவ்வாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. "மில்லியினம் ஜோக்" என்று சொல்வார்களே அது இதுதானோ!
ஆம்! இந்தநூற்றாண்டின் தலைசிறந்த கேலிக்கூத்து அரங்கேற்றப் பட்டிருக்கிறது. அமைதி என்ற வார்த்தையை அதிகமாக உச்சரித்ததால் அமைதிக்கான் நோபல் பரிசு கிடைத்துவிடும் என்ற இரகசியம் தெரியாமலேயே நாம் நமது ஆயுளை வீணடித்துவிட்டோம் என்ற கவலை வேண்டாம். மேற்கத்தியர்களால் வழங்கப்பெறும் விருதுகள் ஏறக்குறைய அனைத்துமே அரசியல் சார்ந்தவையும், இஸ்லாமிய விரோத்தினை ஊக்குவிப்பமையுமே என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று ஆறுதல் கொல்வோம்.
சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் வகையராக்களுக்கு மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் வாரி வழங்கும் முன்னுரிமைகளும், கெளரவங்களுமே இதற்கு போதுமான சாட்சிகளாகும்.
நோபல் பரிசுகள் வாங்கியவர்களில் இஸ்லாமியர்கள் மிகவும் சொற்பானவர்களே! என்ற ஆதங்கமாக வரையப்பட்ட கட்டுரை ஒன்றினை சமீபத்தில் படித்த ஞாபகம். கவலைப்படவேண்டாம். பெருமைப்படுவோம். இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி, ஈவுஇரக்கமின்றி கொல்பவர்களுக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு என்ற நிபந்தனை என்றால் அதனை ஒரு இஸ்லாமியர் வாங்காமல் இருப்பது சிறந்ததுதானே. நோபல் பரிசுகள் அதிகம் பெறாததனால் இஸ்லாமியர்கள் அறிவீனர்களும் அல்லர். நோபல் பரிசுகள் அதிகம் பெற்றதனால் மேற்கத்தியர்கள் இஸ்லாமியர்களைவிட அறிவானவர்களும் அல்லர்.சத்தியப்பாதையான இஸ்லாத்தினை தேர்ந்தெடுத்தது ஒன்றே போதுமானது; இஸ்லாமியர்கள் உலகில் அனைவரையும் விட அறிவாளிகள் என்பதற்கு.
இவ்வாண்டுதானே இரத்தகரை அதிபர் ஒருவர் இவ்விருதினை வாங்குகிறார். இதற்கு முன்பு சரியான நபர்களுக்குதானே வழங்கப்பட்டிருக்கிறது என்று சிலருக்கு தோன்றலாம். அதில் தவறில்லை. அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் சற்று சிந்தித்துப்பார்த்தால் அது வெறும் கண்துடைப்பு போன்றே தோற்றமளிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் போது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களின் பெயர்கள் அடிபடமால் இருந்ததில்லையே!. அதில் உச்சமாக அமைதிக்கும், இரக்கத்திற்கும், ஏன் மனித இனத்திற்கே சற்றும் பொருந்தாத ஜார்ஜ் புஷ்ஷின் பெயர் கூட அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறதே!.
தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு எப்படி அமெரிக்கா மற்றும் மேற்கத்தியர்களிடம் சரியான இலக்கணம் இல்லையோ அதுபோலவே அமைதி என்ற வார்த்தைக்கும் இவர்களிடம் தெளிவான இலக்கணமில்லை. தாங்கள் சொல்வதுதான் அமைதி என்ற ஆணவம் இருக்கும்வரை அமைதிக்காண தெளிவான இலக்கணத்தினை இவர்களால் வகுக்க இயலாது.
சில ஆண்டுகளூக்கு முன்பு நடிகர் கமலஹாசனிடம் ஒரு பத்திரிக்கையாளர் “உங்களின் அடுத்த இலக்கு ஆஸ்கர் விருதுதானே" என்று கேட்டார். அதற்கு கமல் "ஆஸ்கர் விருது என்பது உலகத்தரம் வாய்ந்ததல்ல அது அமெரிக்க தரம் வாய்ந்தது. அமெரிக்காவின் தரத்தினைதான் நாம் இராக்கிலே பார்க்கிறோமே" என்று பதிலளித்தார். உண்மையும் கூட அதுதான். அதுபோலவே மேற்கத்தியர்களால் வழங்கபெறும் விருதுகள் அவர்களின் சிந்தனைகளையும், கருத்துகளையும் ஏற்பவர்களுக்கே வழங்கபடுவது மீண்டுமொரு நிரூபித்துவிட்டது.
அமெரிக்க அதிபர் ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்கியதன் மூலம் அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றவர்களை நோபல் கமிட்டி அவமானப்படுத்தியிருப்பதாகவும் சிலர் எண்ணக்கூடும்.ஒபாமா எந்த விதத்தில் இவ்விருதிற்கு பொருத்தமானவர் என்பது நோபல் குழுவிற்கே வெளிச்சம். பெண்களையும், குழந்தைகளையும் குறிப்பாக இஸ்லாமியர்களை கொல்வதையே கொள்கையாக கடைபிடித்து வரும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் ஒபாமாவும் ஒருவர். அமெரிக்காவின் பாரம்பரியமிக்க இக்கொள்கையினை சற்றும் பிசகாமல் கடைபிடித்து வரும் ஒபாமாவிற்கு இவ்விருதினை வழங்கியதன் மூலம் இவ்விருதின் தராதரத்தினை உலகம் அறிந்துக்கொள்வதறுகு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது.
ஒபாமா கடந்த பத்து மாதங்களில் எதை சாதித்துவிட்டார்? மற்ற அமெரிக்க அதிபர்களை ஒப்பிடுகையில் அதிகமான முறை அமைதி என்ற வார்த்தையை உச்சரித்ததாலா? அல்லது ஆப்கானிய அப்பாவிகளை கொல்வதற்கு மேலும் ஆயிரக்கணக்கான கொடுங்கோல் இராணுவத்தினை அனுப்ப முயற்சிப்பதாலா? அல்லது தினம் தினம் நூற்றுக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்களை ஆளில்லா விமானத்தின் மூலம் கொன்றொழிப்பதாலா? அல்லது பொருளாதார தடை என்ற பெயரில் லட்சக்கணக்கான இரானியர்களை கொல்ல துடிப்பதாலா? அல்லது (மேற்கத்தியர்களால் உருவாக்கப்பட்ட) பொருளாதார வீழ்ச்சியிலும் உலகில் பீதியை ஏற்படுத்தி தமது ஆயுத விற்பனையை படுஜோராக விரிவுப்படுத்துவதாலா? அல்லது இஸ்ரேலின் பயங்கரவாத செயல்களுக்கு தொடர்ந்து ஆசிர்வதிப்பதாலா? அல்லது பாலஸ்தீனில் வரலாறு கானாத பெரும் போர்க்குற்றத்தினை அப்பாவிகள் மீது இஸ்ரேல் அரங்கேற்றியது என்று உண்மையை யூதராக இருந்தும் உலகிற்கு ஆதாரத்துடன் நிரூபித்த கோல்டுஸ்டோனின் அறிக்கையினை வழக்கம்போல் தமது வீட்டோ என்ற அதிகாரத்தினை பயன்படுத்தி கிடப்பில் போட முயற்சிப்பதாலா? அல்லது தமக்கு ஒத்துவராத ஆட்சியாளர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு குழப்பதினையும், கிளர்ச்சியினையும் உருவாக்குவதற்கு தமது உளவுத்துறையை பயன்படுத்துவதாலா? அல்லது மனித இனம் பார்த்திராத சித்ரவதைகளை வெளி உலகிற்கு தெரிந்த அபூகரிப் மற்றும் குவாண்டனமோ சிறைகளில் அரங்கேற்றுவதாலா? அல்லது அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்காக தன் கள்ளக்குழந்தை இஸ்ரேலுக்கு மேலும் மேலும் ஆயுதங்களை வாரி வழங்குவதாலா? அல்லது கோடிக்கணக்கான குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் ஆப்ரிக்காவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது வட்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தமது கட்டுபாட்டில் இயங்கும் உலக வங்கியினை மென்மேலும் கொள்ளையடிக்க ஊக்கப்படுத்துவதனாலா? அல்லது அமைதி, பேச்சுவார்த்தை என்று பாகிஸ்தானும் இந்தியாவும் நெருங்கி வரும்போது இந்தியாவைப்பற்றி பாகிஸ்தானிடமும், பாகிஸ்தான் பற்றி இந்தியாவிடமும் போட்டுக்கொடுப்பதனாலா? இவற்றில் எந்த காரணத்திற்காக ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது?
இல்லை இல்லை அந்த விருதிற்கு தகுதியானவராக இனிமேல் தான் ஒபாமா தன்னை மாற்றிக்கொள்ளவேண்டுமா? இவ்விருதிற்கு தன்னை தகுதியானவராக மாற்றிக்கொள்ள வேண்டுமேயானால் அமெரிக்க அதிபரனாவர் மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். மனித இனத்திற்கு எதிராக நமக்கு முன்னாள் இருந்த அமெரிக்க அதிபர்கள் செய்த அநியாயங்களுக்காகவும், அக்கிரமங்களுக்காகவும் அப்பாவி மக்களிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடப்போகிறாரா? அல்லது பில்லியன் பில்லியன் டாலர்களை நஷ்டயீடாக வாரி இறைக்கப்போகிறாரா? அல்லது தம்மிடமுள்ள ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களில் ஒன்றையாவது அழிக்கபோகிறாரா? அல்லது தனது கள்ளக்குழந்தை இஸ்ரேலின் கொடுஞ்செயல்களையும், போர்க் குற்றத்தினையும் கண்டிக்கவாவது போகிறாரா? அல்லது பாலஸ்தீன மக்களை ஏமாற்றுவதை நிறுத்தத்தான் போகிறாரா? அல்லது இராக்கிலும், ஆப்கனிலும் இன்னும் பல பகுதிகளில் தங்கள் இராணுவத்தினர் புரியும் அடாவடிகளை நிறுத்துவதற்கு உத்தரவிடப்போகிறாரா? அல்லது உலகில் பல பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கும் தமது இராணுவத்தினரை திரும்ப அழைக்கத்தான் போகிறாரா? இவைகளைலில் எவற்றையுமே செய்யாதவரை ஒபாமா இவ்விருதிற்கு எவ்வகையிலும் பொருத்தமானவருமில்லை! தகுதியாயனவருமில்லை!
நீடூர் ஏ.எம்.பி.பைஜுர் ஹாதி, ஐ.அ.அமீரகம்
நீடூர் ஏ.எம்.பி.பைஜுர் ஹாதி, ஐ.அ.அமீரகம்
1 கருத்துகள்: on "விருதின் விலை என்ன?"
rombavum sirappana oru blog post. romba vum arumai. ithe pol melum post ezhutha vendum...
கருத்துரையிடுக