
நேற்று இரவு அலிகார் ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் முசாபர் சித்திக்கி கூறுகையில், B.Sc இறுதியாண்டு படித்து வந்த ஷாநவாஸ் என்ற மாணவர், அந்த ஹோட்டலுக்குப் போயிருந்த போது வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளார்.அப்போது அவருக்கும், இன்னொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர் ஷாநவாஸை துப்பாக்கியால் சுட்டு விட்டார்.
இதையடுத்து உடனடியாக அவரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஷாநவாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர் என்றார்.
ஷாநவாஸை சுட்டுக் கொன்ற நபரின் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், ஒரு நபரை இதுதொடர்பாக பிடித்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
source:twocircles
0 கருத்துகள்: on "அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சுட்டுக் கொலை"
கருத்துரையிடுக