26 அக்., 2009

காஷ்மீரில் இராணுவத்தினர் மீண்டும் வெறியாட்டம் - ஒருவர் கொலை

காஷ்மீரில் இராணுவத்தினரின் வெறியாட்டம் மீண்டும் தன் கைவரிசையை காட்டியுள்ளது.

காஷ்மிரில் 21 வயது மதிக்கத்தக்க மனநலம் குன்றிய ஒரு நபரை தங்களை தாக்க வந்ததாக கூறி இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியின் MLA தலைமையில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஷ்டிரிய ரைபிள் பிரிவை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றும் படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை அடுத்து, அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது, மேலும் போலீஸார், இராணுவம் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பிரதமர் மன்மோகன் சிங் ஜம்மு காஷ்மீருக்கு வருகிற 28 ஆம் தேதி சுற்றுப்பயணம் வைத்திருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் மோசமானது.

இது குறித்து இராணுவ தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட அந்த மனிதர் அவர்களுடைய முகாமிற்குள் புகுந்ததாகவும் அங்கிருந்த ஒரு இராணுவ வீரரை கோடாரியால் தாக்க முயன்றதாகவும்" கூறுகின்றனர்.ஆனால் இதனை பொது மக்கள் நம்ப மறுக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை, நாங்கள் பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் கேட்கும் கேள்வி, "இது போன்ற நிகழ்வுகளுக்கு உங்களது பதில் என்ன? என்பது தான்" என்று MLA ரஷித் கூறினார். இது போன்ற சம்பவங்கள் காஷ்மீர் அரசு மக்களுக்கு நீதி வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
source:NDTV,thapalpetti

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஷ்மீரில் இராணுவத்தினர் மீண்டும் வெறியாட்டம் - ஒருவர் கொலை"

கருத்துரையிடுக