டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மிகக் கடுமையாக விமர்சிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சூப்பர் பவரிங் இந்தியா' என்ற இந்த புத்தகத்தை முன்னாள் இந்திய விமானப் படை தலைவரான ஏர்மார்ஷல் ஏ.கே.முகோபாத்யாயா எழுதியுள்ளார். ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமான இவர் தனது புத்தகத்தில் வாஜ்பாயை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், அதைப் பற்றியெல்லம் கவலைப்படாமல் வாஜ்பாய் கவிதை எழுதிக் கொண்டு இருந்தார்.
ஆர்எஸ்எஸ்சுக்கு பணிந்து நடப்பது போல வாஜ்பாய் காட்டிக் கொண்டார். ஆனால், அவரது சந்தர்ப்பவாத செயல்களாலும் அரசியல் நடவடிக்கைகளாலும் பாஜக மட்டுமல்ல ஆர்எஸ்எஸ்சும் சேர்ந்து பாதிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று நடந்த விழாவில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயலும் புத்தகம் எழுதுகிறார்:
இந் நிலையில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த விஜய் கோயலும் ஒரு புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.
இந் நிலையில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த விஜய் கோயலும் ஒரு புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலத்தில் என் நாட்கள் என்ற தலைப்பில் இவர் எழுதப் போகும் புத்தகமும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.
source:thatstamil
0 கருத்துகள்: on "புத்தக வெளீயீட்டால் சிக்கித்தவிக்கும் பாஜக- வாஜ்பாயை விமர்சிக்கும் புத்தகம் ஆர்எஸ்எஸ் தலைவர் வெளியிட்டார்"
கருத்துரையிடுக