ஜின்ஜியாங்: கடந்த ஜூலை மாதம் ஜின்ஜியாங் தலைநகர் உரூம்கியில் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புபடுத்தி சீன அரசு 9 உய்கூர் முஸ்லிம்களை தூக்கிலிட்டது.
கொலை, தீவைத்தல் ஆகிய குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் பார்வைக்கு அனுப்பப்பட்டபிறகே தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆனால் இது முற்றிலும் ஒருதலைபட்சமானது என்றும் உரூம்கியில் ஹான் இனத்தவரை திருப்திபடுத்தவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உய்கூர் தலைவர் தில்ஷாத் ரஷீத் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜூலை ஐந்தாம் தேதி பரவிய கலவரத்தில் ஏறத்தாழ 197 பேர் கொல்லப்பட்டனர். ஹான் இனத்தவர்கள் இக்கலவரத்தில் கொல்லப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்திருந்தாலும் ஆனால் போலீசாரின் துணையுடன் கொல்லப்பட்டது முஸ்லிம்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
ஹான் இனத்தவர் கூட்டமாக உய்கூர் முஸ்லிம்கள் வசிக்கும் ஜின்ஜியாங்(கிழக்கு துருக்கிஸ்தான்) பகுதியில் குடியேறியதுதான் கலவரத்திற்கு காரணமாகிறது. அரசு ஒத்துழைப்புடன் ஹான் இனத்தவர்கள் ஜின்ஜியாங்கில் குடியேறியதால் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளனர். சுயாட்சி கோரி பலகாலமாக போராட்டம் நடைபெற்றுவரும் பிரதேசம் ஜின்ஜியாங்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஜின்ஜியாங் கலவரம்:9 உய்கூர் முஸ்லிம்களை சீனா தூக்கிலிட்டது"
கருத்துரையிடுக