10 நவ., 2009

எல்லையில் பிடிப்பட்ட அமெரிக்கர்கள் உளவாளிகள்: ஈரான்

தெஹ்ரான்: ஈராக் எல்லையில் வைத்து கைதுச்செய்யப்பட்ட மூன்று அமெரிக்க குடிமகன்களின் நோக்கம் உளவு வேலைப்பார்ப்பதுதான் என்று ஈரான் அதிகாரிகள் கூறினர்.
இதனால் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஜூலையில் தான் ஷைன் போவர், ஸாரா சுர்த், ஜோஷ் பட்டல் ஆகியோர் ஈரான் போலீசிடம் சிக்கினர். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டம்பெற்றுவிட்டுதான் இம்மூவரும் ஈரான் வந்துள்ளனர். உளவு பார்ப்பதற்காகத்தான் இவர்கள் ஈரான் வந்தார்கள் என்பது தெரிந்ததாக தெஹ்ரானின் அரசு தரப்பு வழக்கறிஞர் அப்பாஸ் ஜஃபரி தவுலத்தாபாதி கூறினார். விசாரணை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், "இவர்கள் நிரபராதிகள். தெரியாமல் ஈரான் எல்லையில் வந்து மாட்டியுள்ளனர். எனவே அவர்களே விடுவிக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எல்லையில் பிடிப்பட்ட அமெரிக்கர்கள் உளவாளிகள்: ஈரான்"

கருத்துரையிடுக