அஹ்மதாபாத்: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் 19 போலீசாருக்கு சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) சம்மன் அனுப்பியுள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சூப்பிரண்ட் ஆகியோர் இதில் அடங்குவர். வாக்குமூலம் பதிவுச்செய்ய சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பாக ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.
துணை காவல்துறை இயக்குநர் பிரமோத் குமார் தலைமையிலான புலனாய்வு குழு இஷ்ரத் ஜஹான் வசித்திருந்த மும்பையிலுள்ள மும்பரா பகுதிக்கு சென்று பார்வையிட்டது. புனேயில் ஜாவேதின் வீட்டையும் இக்குழு பார்வையிட்டது. இந்த போலி என்கவுண்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சில போலீஸ் அதிகாரிகள் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "போலி என்கவுண்டர்: 19 போலீசாருக்கு சம்மன்"
கருத்துரையிடுக