9 நவ., 2009

மஹாராஷ்ட்ரா சட்டசபையில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நவநிர்மாண்சேனா

மும்பை:மஹாராஷ்ட்ராவில் மொழிவெறியை தூண்டி வன்முறையில் ஈடுபட்டுவந்த ராஜ் தாக்ரே தலைமையிலான நவநிர்மாண் சேனா சட்டமன்றத்திலும் தனது வெறியாட்டத்தை தொடர்கிறது.
சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அபூ ஆஸ்மியின் மீது தாக்குதல் நடத்தினர் நவநிர்மாண் சேனா உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது மராத்திமொழியில்தான் பதவிபிரமாணம் செய்யவேண்டும் என்று நவநிர்மாண் சேனா உறுப்பினர்கள் கோரினர். ஆனால் ஆஸ்மி ஹிந்தியில் சத்தியபிரமாணம் செய்ததையடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தினர் நவநிர்மாண்சேனா வெறியர்கள்.
நவநிர்மாண் சேனா சட்டமன்ற உறுப்பினரான ராம் கடாம் என்பவன் ஆஸ்மியின் முகத்திலும், நெஞ்சிலும் தாக்கினான். நவநிர்மாண்சேனையின் இந்த வெறி தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி ஆதாரம் :தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மஹாராஷ்ட்ரா சட்டசபையில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நவநிர்மாண்சேனா"

கருத்துரையிடுக