லண்டன்:ஆப்கானிஸ்தானிலிருந்து பிரிட்டன் ராணுவத்தை வாபஸ்பெற வேண்டுமென்று பிரிட்டனின் பெரும்பாலான குடிமக்கள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையின் ஆக்கிரமிப்பைத்தொடர்ந்து யுத்தபூமியாக மாறிய ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்படவேண்டும் என்று 63 சதவீத பிரிட்டீசார் கருத்து தெரிவித்ததாக கோம்ரைஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போரில் வெற்றிபெறமுடியாது என்று 64 சதவீத மக்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை 27 சதவீதம் பேர் ஆதரிக்கவில்லை. முன்னால் பிரதமரான டோனி பிளேயருக்கு எவ்வாறு ஈராக் அமைந்ததோ அவ்வாறே தற்போதைய பிரதமர் கோர்டன் ப்ரவுனுக்கு ஆப்கானிஸ்தான் என்று கோம்ரைஸ் சி.இ.ஒ ஆன்ட்ரூ ஹாக்கின்ஸ் கூறுகிறார். பிரிட்டீஷ் பொதுமக்களில் 10 இல் 4 பேருக்கு ஆப்கானிஸ்தானில் பிரிட்டீஷ் படையினரின் பணி என்ன என்பது தெரியாது என்று ஹாக்கின்ஸ் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பெரும்பான்மையான பிரிட்டீஷ் மக்கள் ஆஃப்கானிஸ்தானில் பிரிட்டீஷ் ராணுவம் வாபஸ் பெறுவதை விரும்புகின்றனர்"
கருத்துரையிடுக