டெல் அவீவ்: பாதுகாப்புத்துறையில் இஸ்ரேலின் உதவியை வலுப்படுத்தும் விதமாக இந்திய ராணுவ உயர் அதிகாரி தீபக் கபூர் இஸ்ரேல் சென்றடைந்தார். முதிர்ந்த ராணுவ அதிகாரியை அவர் சந்தித்து பேசினார்.
இஸ்ரேலின் பராக் ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சி.பி.ஐ விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கையில்தான் தான் இந்திய ராணுவ உயர் அதிகாரியின் இஸ்ரேல் பயணம் நடைபெறுகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக், ஸ்டாஃப் லெஃப்டினன்ட் ஜெனரல் தலைவர் கபி அஷ் கென்ஸாயி ஆகியோருடன் தீபக் கபூர் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
இஸ்ரேல் ராணுவத்தின் தெற்கு பகுதி கமான்டையும் இவர் பார்வையிடுகிறார். சமீபகாலங்களில் ரஷ்யாவை முந்திக்கொண்டு இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆயுத விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை சம்பந்தமான ஏற்றுமதியில் 50 சதவீதமும் இந்தியாவிற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இறக்குமதி செய்வதில் 30 சதவீதமும் இஸ்ரேல் ஆயுதங்களைத்தான். இந்தியாவில் தயாராகி தூசிபடிந்து கிடக்கும் ஆயுதங்கள் ஒருபுறமிருக்க அதே தரத்திலிலுள்ள தரங்குறைந்த ஆயுதங்களை இஸ்ரேலிலிருந்து இந்தியா இறக்குமதிச்செய்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தத்தில் நிகழ்ந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. 110 கோடி டாலர் ஆயுத ஒப்பந்தத்தை சமீபத்தில் இந்தியா இஸ்ரேலுடன் செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இந்திய ராணுவ உயர் அதிகாரி இஸ்ரேலில்! இஸ்ரேலின் பாதுகாப்பு உதவியை பலப்படுத்துகிறது இந்தியா"
கருத்துரையிடுக