9 நவ., 2009

மக்காவில் ஹாஜிகளின் சிரமங்களை எளிதாக்கும் இந்திய ஹஜ் சேவைத்தொண்டர்கள்

மக்கா:மக்காவில் இந்திய ஹஜ் தொண்டு ஊழியர்களின் சேவை ஹாஜிகளின் சிரமங்களை மிகவும் குறைப்பதாக இந்தியன் ஹஜ் மிஷன் இன்ஃபர்மேசன் சென்டர் ஒருங்கிணைப்பாளர் கமருத்தீன் கூறினார்.
ஹரம் ஷரீஃபில் வரும் ஹாஜிகளுக்கு வழி தவறுவது, உடன் வந்தோர் காணாமால் போவது போன்ற பிரச்சனைகளைத்தான் பெரும்பாலும் அல்ஜியாத் காக்கி கட்டிடத்திலிலுள்ள இன்ஃபர்மேசன் சென்டர் கையாளூகின்றது. தினமும் 150 க்கும் மேற்பட்டோர் இன்ஃபர்மேசன் சென்டருக்கு இது சம்பந்தமாக‌ வருவதாக கமருத்தீன் கூறினார்.
இந்திய ஹஜ் மிஷன் தொண்டு ஊழியர்கள், ஹஜ் மிஷனின் கீழ் செயல்படும் டாஸ்க் ஃபோர்ஸ் மற்றும் இந்திய ஃபெடர்னிடி ஃபாரம் தொண்டு ஊழியர்கள் ஆகியோரின் கடின உழைப்பின் மூலம் இன்ஃபர்மேசன் சென்டர் ஹாஜிகளின் பிரச்சனைகளை எளிதில் கையாள முடிகின்றது என கமருத்தீன் தெரிவித்தார்.
மக்காவில் ஹாஜிகளுக்கு சேவை செய்வதற்காக பல்வேறு மாநிலங்களைச்சார்ந்த 30 தொண்டு ஊழியர்களை இந்திய ஃபெடர்னிடி ஃபாரம் ஷிப்டு முறையில் நியமித்துள்ளது. இவர்கள் இந்தியன் ஹஜ் மிஷனுடன் ஒத்துழைத்து பல்வேறு பிரச்சனைகளில் உதவி புரிந்து வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் 60 க்கும் மேற்பட்ட தொண்டு ஊழியர்களை ஃபெடர்னிடி ஃபாரம் களத்திலிறக்குகிறது. மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமை சுற்றி ஹாஜிகளுக்கு சேவைக்காக நிற்கும் சீருடை அணிந்த தொண்டு ஊழியர்களின் சேவைகளால் எல்லா மாநிலத்தைச்சார்ந்த ஹாஜிகளும் பயன்பெறுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மக்காவில் ஹாஜிகளின் சிரமங்களை எளிதாக்கும் இந்திய ஹஜ் சேவைத்தொண்டர்கள்"

கருத்துரையிடுக